1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Duraimurugan election campaign in Kadpadi

தப்பான ஆள் வந்தா தெரு விளக்கு போட மாட்டார்.. மனைவிக்கு கம்மல் போடுவார்! – துரைமுருகன் நகைச்சுவை பேச்சு!

Tamilnadu
காட்பாடியில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துரைமுருகன் திமுகவின் செயல்பாடுகள் குறித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காட்பாடி ஆரிய முத்துமேட்டூரில் அந்த பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர் ”பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முக்கியமானது. கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பஞ்சாயத்து தலைவரிடம்தான் நிதி அளிக்கப்படும். சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால் அவர் தெரு விளக்கு போடுவதற்கு பதிலாக மனைவிக்கு கம்மல் போட்டுவிடுவார்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
23 ஆயிரத்தை தொட்ட தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!