1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain falls following 4 days

தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamilnadu
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்து வரும் நிலையில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்று மிதமான மழையும், நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மம்தா பானர்ஜி தொகுதியில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!