வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (08:53 IST)

கொரோனா தடுப்பூசி போட்ட கர்ப்பிணி பெண் மரணம்? – உறவினர்கள் போலீஸில் புகார்!

கொரோனா தடுப்பூசி போட்ட கர்ப்பிணி பெண் மரணமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடந்த நிலையில் திருத்தணி அருகே உள்ள புதூர் மேட்டுக்காலணியை சேர்ந்த 9 மாத கர்ப்பிணியான லாவண்யா தனது கிராமத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

அன்றைய தினம் நள்ளிரவு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு அதிக வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். லாவண்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.