வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:07 IST)

அவரை பேசவிடுங்கள்… எடப்பாடிக்காக பேசிய துரைமுருகன்!

நீட் விலக்கு மசோதாவுக்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை இன்று தமிழக அரசு கூட்டியது.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.பாஜக தவிர அனைத்து கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு அளித்த நிலையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘இந்த சட்டம் எந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை’ என்றார். அப்போது பேசத் தொடங்கிய செல்வப் பெருந்தகையிடம் குறுக்கிட்ட திமுக மூத்த தலைவர் துரைமுருகன் ‘இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். அவர் பேசும்போது குறுக்கிடுவது சரியல்ல. அவரை பேச விடுங்கள்’ எனப் பேசினார்.