திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:43 IST)

மதமாற்ற திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை- பாஜக தேர்தல் அறிக்கை

மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை  மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என  பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், உத்தரபிரதேச மா நிலத்தில் பாஜக ஒரு தேர்தல் அறிக்கை வெளயிட்டுள்ளது. அதில், மதமாற்றம் திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். தீபாவளி பண்டிகை அன்று இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனவும், 60 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு பொதுப்போக்குவரத்தில் இலவச பயணம் செய்ய அனுமதி எனத் தெரிவித்துள்ளது.