1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Durai Murugan test positive for corona virus

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா !

corona virus
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் இந்தியாவின் ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மத்திய அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, துரைமுருகன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல். தேர்தலுக்கு முன்னர் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு தற்போது அவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, துரைமுருகன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
உயிர்பிரிந்தாலும் ஒன்றாய் இணைந்த நண்பர்கள்! – அரியலூரில் நெகிழ செய்த சம்பவம்!