1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mask mandatory

தனியாகவே இருந்தாலும்... மாஸ்க் கட்டாயம்!

கொரோனா
கொரோனா அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்குச் செல்லும் போது, காரை தனியாக ஓட்டிச்சென்றாலும் கூட மாஸ்க் அணிவது கட்டாயம். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.  
 
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,15,736 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்தது. புதிதாக 630 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,66,177 ஆக உயர்ந்தது.
 
இந்நிலையில்  கொரோனா அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்குச் செல்லும் போது, காரை தனியாக ஓட்டிச்சென்றாலும் கூட மாஸ்க் அணிவது கட்டாயம். தடுப்பூசி போட்டிருந்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அடுத்த கட்டுரையில்
சரத்குமாரின் ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு