புதுச்சேரிக்கு ஊரடங்கு தேவை இல்லை; ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன்!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து துணை நிலை ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் பகுதி நேர மற்றும் இரவு நேர ஊரடங்கை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் “கொரோனாவை தடுக்க ஒரு மாதத்திற்குள்ளாக புதுச்சேரியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம் உள்ளது. புதுச்சேரியில் தற்போதைய சூழலில் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை” என தெரிவித்துள்ளார்.