1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 7 ஏப்ரல் 2021 (16:56 IST)

தமிழகத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள்? தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பாக சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தமிழகத்தில் புதிதாக என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கலாம், கொரோனாவை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்ட ஆலோசனை தற்போது தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது 
தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இருப்பினும் முழு ஊரடங்கு அல்லது இரவு நேர ஊரடங்கு ஆகியவை கண்டிப்பாக தமிழகத்தில் இருக்காது என்றும் ஏற்கனவே தளர்வுகள் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அறிவிக்கப்படலாம் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன