மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதிக்கு மூளை பக்கவாதமா?
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேரன்களில் ஒருவர் தயாநிதி அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சர் மு க அழகிரியின் மகனான இவர் கிளவுட் நைன் எனும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவன்ம் அஜித்குமார் நடித்த மங்காத்தா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் துரை தயாநிதி தன்னுடைய சென்னை வீட்டில் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை மூளைப் பக்கவாதம் என மருத்துவத்துறையில் அழைக்கின்றனர்.
இந்நிலையில் பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துரை தயாநிதியை மருத்துவமனைக்கு சென்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்த்துள்ளார். மேலும் மருத்துவர்களிடம் அவரின் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.