1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Hospital statement abot vijayakanth health

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனையின் அதிர்ச்சி தகவல்..!

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இதுகுறித்து சென்னை தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரு விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம்.

அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சனாதன வெறுப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!