1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: திங்கள், 4 டிசம்பர் 2023 (10:45 IST)

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்… நோயாளிகள் கடும் அவதி!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றிரவு முதல் சென்னை முழுவதும் பெருமழை பெய்து வருகிறது. அதனால் சென்னை முழுவதும் வெள்ளக் காடாக மாறிவருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளனர். பல  இடங்களில் வெள்ளம் ஆறாக ஓடும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை வருத்தம் கொள்ள செய்துள்ளன.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு முழுவதும் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.