1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 டிசம்பர் 2023 (08:09 IST)

சீனாவில் நிமோனியா பாதிப்பு.. மருத்துவமனைகளில் குவியும் குழந்தைகளால் பரபரப்பு..!

சீனாவில் நிமோனியா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் குழந்தைகள் அதிக அளவு அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் தற்போது சீனாவில் நிமோனியா காய்ச்சல் ஆட்டிப்படைத்து வருகிறது,. பெரும்பாலும் குழந்தைகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதால் சீன அரசு இதை தடுப்பது எப்படி என்று தெரியாமல் திணறி வருகிறது.

கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போதும் விதிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளே பொதுமக்கள் முடங்கியுள்ளனர். மாணவர்கள் ஆன்லைனில் தான் பாடங்களை படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகளை தாக்குவதால் சீன மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும் குழந்தைகள் ஒரு சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் பெரும்பாலான பகுதிகளை பள்ளிகள் மூடப்பட்டு தற்போது ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவமனை வளாகங்களில் ஹோம் ஒர்க் அறை என்று ஒதுக்கப்பட்டு ஆசிரியர்கள் வழிகாட்டுதலோடு அங்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva