வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (08:26 IST)

அமேசான் வரலாற்றில் முதல் முறையாக… ஊழியர்களுக்கு ஆப்பு!

அமேசான் நிறுவனம் இந்த வாரம் முழுவதும் ஊழியர்களை குறைக்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது.


ஆழமான மதிப்பாய்வுகளுக்குப் பிறகு, நாங்கள் சமீபத்தில் சில குழுக்கள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்தோம். இந்த முடிவுகளின் விளைவுகளில் ஒன்று, சில பாத்திரங்கள் (Designations) இனி தேவைப்படாது என்று வன்பொருள் தலைவர் டேவ் லிம்ப் தொழிலாளர்களுக்கு அறிவித்தார்.

இதன் விளைவாக டிவைசஸ் & சர்வீசஸ் நிறுவனத்தில் இருந்து திறமையான அமேசானியர்களை நாங்கள் இழக்க நேரிடும் என்பதால் இந்தச் செய்தியை வழங்குவது எனக்கு வேதனை அளிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். அதோடு கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமேசானின் கடந்த வேலை நீக்கம் வரலாற்றில் இது மிகப்பெரிய ஆட்கள் நீக்கம் என்று தெரிகிறது. இந்த எண்ணிக்கை அதன் கார்ப்பரேட் பணியாளர்களில் தோராயமாக 3 சதவிகிதம் ஆகும். மேலும் மொத்த பணிநீக்கங்களின் எண்ணிக்கை மாறலாம் என்றும் தெரிகிறது.

முன்னதாக மெடா நிறுவனமும் ஆள் குறைப்பில் சமீபத்தில் ஈடுபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By: Sugapriya Prakash