1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dry climate to prevail in Tamil Nadu

விலகும் வடகிழக்கு பருவமழை... இனி வறண்ட வானிலையே..!!

தமிழகம்
வரும் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.
 
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.     
 
இதனால் வரும் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸின் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை! – உத்தரப்பிரதேசத்தில் எடுபடுமா?