1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DGP warn about Govt emblem in another vehicles

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை! – டிஜிபி எச்சரிக்கை!

Tamilnadu
மத்திய மற்றும் மாநில அரசுகளின் சின்னத்தை அனுமதியின்றி வாகனங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சின்னங்கள் அரசு அதிகாரிகள், ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாகனங்களில் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதி உள்ளது. ஆனால் சில முன்னாள் அமைச்சர்கள், அரசின் ஒப்பந்த வாகனங்களிலும் இந்த சின்னங்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து எச்சரிக்கை செய்துள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அனுமதியின்றி மத்திய மாநில அரசுகளின் சின்னங்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களில் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மாப்பிள்ளை கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!