ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்! – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 31 வரை மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள், அரசு, தனியார் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெறும் என்றும், பிப்ரவரி 1 தொடங்கி 20ம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.