திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (14:42 IST)

பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு சென்ற வாலிபர் தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

suicide
பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டுச் சென்ற வாலிபர் ஒருவரை மாணவியின் தந்தை தாக்கிய நிலையில் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-1 படித்து கொண்டிருக்கும் மாணவியை  சாம்ராஜ் என்ற வாலிபர் காதலித்துள்ளார். இதனையடுத்து மாணவியை பெண் கேட்டுச் சென்ற சாம்ராஜை மாணவியின் தந்தை அதிரடியாக தாக்கினார். இதனையடுத்து சாம்ராஜ் மனவருத்தத்துடன் இருந்த நிலையில் திடீரென தனது வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார்
 
இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்து சாம்ராஜின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
பிளஸ் ஒன் மாணவியை பெண் கேட்டுச் சென்றபோது மாணவியின் தந்தை சாம்ராஜை சரமாரியாக தாக்கியதால் தான் அவர் மன விரக்தி அடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
 
இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சாம்ராஜ் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் மாணவியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran