1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Drug case jaffer sadik arrested

போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது..!

சாதிக்
போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை சற்றுமுன் கைது செய்ததாக கூறப்படுகிறது

ரூபாய் 2000 கோடி போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த ஜாபர் சாதிக் என்பவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வந்தனர்

இந்த நிலையில் சற்றுமுன் அவர் கைது செய்யப்பட்டதாகவும் இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் என்னென்ன அதிர்ச்சி தரும் தகவல்கள் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டதாகவும் அவரது கைது குறித்த முழு விவரங்கள் இன்னும் சில நிமிடங்களில் தெரிவிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
நோ போதைப்பொருள்.. நோ திமுக.. ’X’ தளத்தில் எடப்பாடி பழனிசாமி