ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (09:39 IST)

குளிர்பானத்தில் மயக்க மருந்து; இளம்பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த நபர்! – சென்னையில் அதிர்ச்சி!

abuse
தனியார் கம்பெனியில் பணிபுரிந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சக ஊழியர் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை அண்ணாநகரை சேர்ந்த 35 வயதான இளம்பெண் ஒருவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அந்த பெண் கணவரை இழந்தவர். அதே கம்பேனியை சேர்ந்த சத்யஜித் என்ற நபர் அந்த பெண்ணுடன் பழக்கமான நிலையில், அந்த பெண்ணிற்கு ஆசை வார்த்தைகளை கூறி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் சத்யஜித்.

தனது வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து செல்வதாக கூறி விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்ற சத்யஜித் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயங்கிய அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதை வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்ட அவர், இளம்பெண் திருமணம் குறித்து கேட்டபோது திருமணம் செய்ய மறுத்ததுடன், தனக்கு ஆசைகளுக்கு அடிக்கடி கூப்பிடும்போது வரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீஸார் சத்யஜித்தை கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K