1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dr Senthil kumar tried to help physically challenged person

மாற்றுத்திறனாளி மாணவருக்காக ரூ.2.4 லட்சம் திரட்டும் தமிழக எம்பி!

டாக்டர் செந்தில்குமார்
மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்காக ரூபாய் 2.5 லட்சம் திரட்டும் பணியில் இருப்பதாக தமிழக எம்பி டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
 
இடுப்புக்கு கீழ் எந்தவித உணர்ச்சியும் இல்லை என்ற நிலையில் சாதிக்க துடிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் இருப்பது குறித்த செய்தி சமீபத்தில் வெளியானது. அவருடைய தாயாரின் நெகழ்ச்சியான பேட்டியும் அனைவரையும் கலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த மாணவருக்கு உதவ முன் முடிவு செய்த டாக்டர் செந்தில்குமார் எம்பி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மாணவரின் ஆசிரியரை தொடர்புகொண்டு பேசியதில் 2.4 லட்சத்தில் ஒரு பிரத்யேக Wheelchair தேவை. 1.1 லட்சம் நன்கொடை தெரிந்தவர்கள் உதவி செய்துள்ள நிலையில்  மீதம் உள்ள தொகையும் வந்து கொண்டே இருப்பதாக தெரிவித்தார். தொகையில் என்ன பற்றாக்குறை உள்ளதோ அதனை நான் உதவிட உறுதி அளித்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு பாடலுக்கு இசையமைத்தவருக்கு திருமணம்: முதல்வர் நேரில் வாழ்த்து!