1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (21:33 IST)

நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால்? விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பாமக

நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால் சர்கார் படத்தை தமிழகத்தில் எந்த தியேட்டரிலும் ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என நடிகர் விஜய்க்கு டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் அவர் சிகரெட் பிடித்தவாறு இருந்த போஸ்டருக்கு பாமக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கடலூரில் பாமக கூட்டம் ஒன்றில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
 
“சர்கார்'' திரைப்படத்தின் விளம்பரத்தில், நடிகர் விஜய் புகை பிடிப்பது மாதிரியான படத்தை பார்த்ததும் எனக்கு கடுமையான கோபம் வந்தது. நடிகர் விஜய்யும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கோடி கோடியாக பணம் வாங்கிக் கொண்டே, புகைக்கும் காட்சியை சர்கார் படத்தில் வைத்திருக்கிறார்கள். நான் பழைய ராமதாசாக இருந்திருந்தால் சர்கார் திரைப்படத்தை எந்த திரையரங்கிலும் ஓட முடியாதபடி எனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன். ஆனால் தற்போது சர்கார் படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெறக்கூடாது என்று விஜய் மற்றும் சன் பிக்சர்சுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளுடன் இனி எந்த படத்தையும் அனுமதிக்க முடியாது” என்றும் அவர் இந்த கூட்டத்தில் பேசினார்.
 
டாக்டர் ராமதாஸின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.