'மக்கள் நீதி மய்யம் கட்சியில் விஜய்? கமல் கூறியது என்ன?
கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அவருடைய கட்சியில் கோலிவுட்டின் முன்னனி பிரபலங்கள் பலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரீப்ரியா உள்ளிட்ட ஒருசிலரை தவிர வேறு யாரும் இணையவில்லை
இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். ஒரு ரசிகர் கமல்ஹாசனிடம், 'உங்களின் தம்பி நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்' என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் அழைப்பை ஏற்று நடிகர் விஜய், 'மக்கள் நீதி மய்யம்' கட்சியில் இணைவாரா? அல்லது தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது அரசியல் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்