1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2018 (20:23 IST)

நாலு படம் ஓடிவிட்டால் நாளைய முதல்வரா? விஜய்யை கலாய்த்த செல்லூர் ராஜூ

இளையதளபதி விஜய் பிறந்த நாளை இன்று அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஒருசில விஜய் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் 'நாளைய முதல்வர் விஜய்' என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் கடுமையான விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றது.
 
இந்த நிலையில் விஜய் முதல்வராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, 'தற்போது ஒரு நடிகரின் நாலு படம் ஓடிவிட்டாலே அவரை முதல்வர் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். எல்லோருக்குமே தெரியும் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றார்கள். அவரது ரசிகர்கள் இவ்வாறு சொல்வது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
 
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், முதல்வராகலாம், எல்லாம் மக்கள் கையில் தான் உள்ளது என்று செல்லூர் ராஜூ மேலும் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த போஸ்டர்கள் குறித்து கருத்து கூறிய நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், 'ரஜினி முதல்வராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 25 வருடங்களாக கூறி வருகின்றனர். ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகர்கள் முதல்வராக வேண்டும் என்பது பல வருடங்களாக நடந்து வருவது தான்' என்று கூறினார்.