திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஜூன் 2018 (18:58 IST)

அழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர் மன்றத்தினர் வைத்த பேனரில் ஆழப்போரன் தமிழன் என்பதற்கு பதிலாக அழப்போரன் தமிழன் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

 
 
நேற்று விஜய்யின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பிட்ட சில தியேட்டர்களில் அவரது படங்கள் திரையிடப்பட்டன. சாலைகளில் பெரும்பாலான இடங்களில் அவருக்கு பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
 
இதில் சில பேனர் மற்றும் போஸ்டர்களில் நாளைய முதல்வரே என்றும், தமிழ்நாட்டை காக்க வா தளபதி என்றும் சூசகமாக  ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்துள்ளனர்.
 
இந்நிலையில், சாலையில் ஒரு இடத்தில் ரசிகர்கள் வைத்த பேனரில் ஆழப்போரன் தமிழன் என்பதற்கு பதிலாக அழப்போரன் தமிழன் என்ற அச்சடித்துள்ளனர். இந்த போட்டோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை கலாய்த்து வருகின்றனர்.