தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவது எப்போது? – மா.சுப்பிரமணியன் விளக்கம்!
- திருவாரூரில் குழாய் உடைந்து வெளியேறிய எண்ணெய்!
- சவரனுக்கு ரூ.240 குறைந்த தங்கம்! – நகை வாங்க சரியான நேரம்!
- கோவாக்சின் தடுப்பூசி எங்களுக்கு வேணாம்! – 324 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில்
- ஒரே பெண்ணுக்கு ஒரே நாளில் மூன்று முறை தடுப்பூசி! – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
அந்த 27000 கோடியை தடுப்பூசிக்கு செலவிடுங்கள்: மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு கோரிக்கை!
ஏற்கனவே செலவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கும் 27 ஆயிரம் கோடியை தடுப்பூசி கொள்முதல் செய்ய செலவு செய்யுங்கள் என திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார்
தமிழகம் உள்பட அனைத்து இந்திய மாநிலங்களிலும் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாதமாநிலங்களுக்கு தடுப்பூசி கட்டுப்பாடுகள் மிக அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தடுப்பூசி வாங்குவதற்கு திமுக எம்பி டிஆர் பாலு யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு தொகுதி ரூபாய் 7,000 கோடி மற்றும் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் 20,000 கோடி ஆகியவற்றை மத்திய அரசு தடுப்பூசிக்கு செலவிடலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த யோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இந்தியா முழுவதும் தடுப்பூசி தடுப்பாடு இருக்கும் இந்த நேரத்தில் 20 ஆயிரம் கோடிக்கு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தேவையா என்ற கேள்வியை கடந்த சில மாதங்களாக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் எழுப்பி வருகின்றனர் என்பதும் ஆனாலும் மத்திய அரசு இந்த கட்டடம் கட்டுவதில் உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
