செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (12:30 IST)

திருவாரூரில் குழாய் உடைந்து வெளியேறிய எண்ணெய்!

திருவாரூரில் உள்ள கிராமத்தில் எண்ணெய்க் குழாய் உடைந்து என்ணெய் விவசாய நிலத்தில் பரவி நாசமாகியுள்ளது.

பனையூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு கீழே ஓ என் ஜி சி யின் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.  குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. இதனால் சிவக்குமாரின் ஒரு ஏக்கர் நிலம் நாசமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எண்ணெய் பரவியதால் அந்த நிலத்தில் இனிமேல் விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.