தேர்தலில் புதிய நடைமுறையை எதிர்த்து திமுக வழக்கு
மக்களவை தேர்தலில் புதிய நடைமுறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் புதிய நடைமுறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
EVM மற்றும் கண்ட்ரோல் இடையே VVPAT எந்திரத்தை வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என திமுக புகார் கூறியுள்ளது.
ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை ஒரே இணைப்பில் வைக்கக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் EVM ,VVPAT இணைப்பாகவும் கண்ட்ரோல் யூனிட் தனியாகவும் வைத்து பயன்படுத்தப்பட்டது.
ஆனால் வரும் தேர்தலில் மூன்றையும் ஒரே இணைப்பில் வைத்து பயன்படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.