திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (18:01 IST)

ராமதாசுக்கு சீட் பேரம் தான் முக்கியம்..! பாமகவை விளாசிய ஜெயக்குமார்..!!

jayakumar
ராமதாசுக்கு சீட் பேரம் தான் முக்கியம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஜெயலலிதா இல்லை என்றால் பாமக வெளியே தெரிந்திருக்காது என்றார். எங்கள் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் பாமகவினர் என்றும் பாமக தொண்டர்களே அதிமுகவுடன் கூட்டணி வைக்க தான் விரும்பினார்கள் என்றும் தெரிவித்தார்.
 
பேரம் அதிகமாகும் இடத்தில் தான் ராமதாஸ் உடன்படுவாறே தவிர கொள்கையாவது, கூட்டணியாவது, வெங்காயமாவது, எதுவுமே அவருக்கு கிடையாது என்று ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.

 
பாமகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது, அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது அதிமுக தான் என்றும் பாமகவால் தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.