வெள்ளி, 12 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:57 IST)

வடசென்னை தொகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.. தேர்தலுக்கு பணமா?

income tax
வடசென்னை தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் பரிசு பொருள்கள் தரப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து அந்த தொகுதியில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பணப்பட்டுவாடா  நடப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் வடசென்னை தொகுதியில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருள்கள் வழங்க இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் 
 
இன்று காலை முதல் சென்னை ஓட்டேரி, ஏழு கிணறு உள்பட ஐந்து இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் சோதனை செய்து வரும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran