திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (17:03 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி கொண்டிருக்கும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது என்றும் இன்று காலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூட தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்   இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருப்பத்தூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஏழு மாவட்டத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் தமிழனும் முழுவதும் இன்னும் சில நாட்களுக்கு வறண்ட வானிலை தான் இருக்கும் என்றும் வெப்பம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran