திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (14:34 IST)

தலைமகனே எழுந்து வா : ஆர்ப்பரிக்கும் திமுக தொண்டர்கள் (வீடியோ)

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் கூடியுள்ளனர்.

 
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று இரவு திடீரென மோசமானது. இந்த செய்தி பரவியதும், ஏராளமான திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கூடினர். மேலும், எழுகவே... தலைவர் கலைஞர் எழுகவே... எழுந்து வா.. எழுந்து வா.. தலைவர் கலைஞர் எழுந்து வா.. என அவர்கள் முழக்கம் எழுப்பினர். 
 
மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் கருணாநிதியின் உடல் நிலை சீரானது. எனவே, தொண்டர்கள் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனாலும், பல தீவிர திமுக தொண்டர்கள் கலைஞர் வெளியே வருவார் தங்களை பார்த்து கையசைப்பார் என விடிய விடிய காத்துக்கிடக்கின்றனர். தற்போது வரைக்கும் இதே நிலை நீடிக்கிறது. 
 
எங்கள் தலைவர் வெளியே வந்து எங்களை பார்த்து கை அசைக்கும் வரை இங்கேயேதான் இருப்போம். வீட்டிற்கு செல்ல மாட்டோம். அரசியலில் பல தலைவர்கள் இருந்தாலும், கலைஞரைப் போல் ஒரு தலைவர் கிடையாது. அவர்தான் எங்களுக்கு எல்லாம். அவரின் சிரித்த முகத்தை பார்க்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம். அது எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை” என அவர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், நேற்று இரவு எழுந்து வா.. எழுந்து வா என அவர்கள் கூக்குரல் இடும் காட்சியை பெண் நிருபர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.