திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (13:27 IST)

கருணாநிதியின் நிலையைக் கண்டு 3 நாட்களாக உறக்கம் இல்லை : நாஞ்சில் சம்பத்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தன்னை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

 
உடல் நலக்குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கடந்த 2 நாட்களாக  தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 
 
இந்நிலையில்தான் நேற்று இரவு அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது அவரின் உடல்நிலை சீரடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவரது உடல் நிலை பற்றி விசாரிக்க மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
 
இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நாஞ்சில் சம்பத் இன்று காலை மருத்துவமனைக்கு வந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கருணாநிதி நலிவுற்றார் என்று கேட்டதில் இருந்து இரண்டு மூன்று நாட்களாக உறங்கவில்லை. தமிழகத்துக்கு என்னை அறிமுகம் செய்தவர் கருணாநிதிதான். கடைசி தமிழரின் நம்பிக்கையும், திராவிடத்தின் ஆணிவேரும் கருணாநிதிதான். 
 
அவரின் உடல்நலம் குன்றியிருப்பதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன். அச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர் கருணாநிதி. மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கை கருணாநிதி. அவரின் நிழில் வளர்ந்தவன் நான். என்னை தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்ததே அவர்தான். அவர் நலிவுற்றிருப்பதை பார்க்க பொறுக்கவில்லை” என அவர் கூறினார்.