பாஜகவின் தொகுதி மறுவரைறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு..
இந்திய பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரை மசோதாவை மத்தியில் ஆளும் பாஜக அரசு விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. மறுவறையில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் தற்போதுள்ள இடங்களில் எண்ணிக்கை கூடுதல் தொகுதிகள் உருவாகும் என சொல்லப்பட்டது. தொடக்கம் முதலே இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18 சதவீத்தில் இருந்து குறையக் கூடாது. 1971ம் வருட மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது. எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் திமுக இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நேற்று கூட திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் மத்திய அரசின் தொகுதி வரையறை மசோதாவை ஆதரிப்பதாக திமுக திடீரென அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய திமுக எம்பி ஆர் ராசா தொகுதி மறுவறையில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் வழங்குவதாக இருந்தால் மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும். நியாயமான தொகுதி மாறுவரைய தவிர திமுக வேறு எதையும் சொல்லவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்பதற்காக புதிய முடிவெடுத்ததாக சித்தரிப்பது கேவலமான செயல் எனவும் அவர் கூறியிருக்கிறார்..