ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (14:07 IST)

கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் இல்லை.. திமுக முடிவால் அதிர்ச்சியில் ப சிதம்பரம்..!

karthi chidambaram
இந்த முறை கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என காங்கிரஸ் இடம் திமுக வலியுறுத்தியதாக கூறப்படுவதால் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் அதிர்ச்சி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கார்த்திக் சிதம்பரம் அவ்வப்போது திமுகவினரை விமர்சனம் செய்து வருவது மட்டுமின்றி சொந்த கட்சி தலைவரான ராகுல் காந்தியை கூட விமர்சனம் செய்துள்ளார். 
 
மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் காந்தி இல்லை என அவர் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் நீட் தேர்வை திமுக உள்ளிட்ட  கட்சிகள் எதிர்த்து வருவதில் கார்த்திக் சிதம்பரம் நீட் தேர்வு குறித்து ஆதரவாக பேசி வருவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என்றும் அங்கு திமுக வேட்பாளர் நிறுத்தப்படுவார்  எனக் கூறியதாக தெரிகிறது.
 
ஆனால் கடந்த முறை இதே மாதிரி கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என்று சொந்த கட்சியினரே கூறிய போது ப சிதம்பரம், காங்கிரஸ் தலைமையை மிரட்டி தான் சீட்டு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran