தொடர்புடைய செய்திகள்
- ஃபீல்டர் இல்லாமல் பேட்டிங் செய்கிறது பாஜக: எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்து கார்த்தி சிதம்பரம்..!
- ED அதிகாரி அங்கீத் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு...!
- அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!
- எனக்கும் அமலாக்கத் துறையிடம் இருந்து மிரட்டல் வந்தது: சபாநாயகர் அப்பாவு
- அமலாக்கத்துறை அதிகாரி கைதான வழக்கின் FIR வெளியானது
ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: அமலாகத்துறை முன் ஆஜரான கார்த்திக் சிதம்பரம்..!
முன்னாள் மத்திய அமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோது 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கார்த்திக் சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்த வழக்கில் அமலாகத்துறை விசாரணையில் கார்த்திக் சிதம்பரம் நேற்று ஆஜர் ஆனார்.
ஏற்கனவே கடந்த 12 மற்றும் 16ஆம் தேதி ஆஜராக இருந்த நிலையில் அன்றைய தினங்களில் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் ஆஜரான நிலையில் அவரது வாக்குமூலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணைக்கு பின்னர் பேட்டியளித்த கார்த்திக் சிதம்பரம் சீன ஊழியர் ஒருவருக்கு கூட தான் விசா பெற்று தரவில்லை என்றும் இந்த வழக்கு என்னை தொந்தரவு செய்யும் நடவடிக்கை என்றும் தனது தந்தையை குறி வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Edited by Siva
