திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஜனவரி 2024 (20:37 IST)

வைரமுத்துவின் 'மகா கவிதை' நூலை வெளியிட்ட முதல்வர் !

maha kavithai bokk release
வைரமுத்துவின் மகா கவிதை என்ற நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியிட நாடாளுமன்ற  உறுப்பினர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
 
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
 
இவ்விழாவில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,  முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம்,  இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை, நடிகரும் மக்காள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
இந்த விழாவில் வைரமுத்துவின் மகா கவிதை என்ற நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியிட நாடாளுமன்ற  உறுப்பினர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
 
இந்த விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் வைரமுத்துவின் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.