திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (17:44 IST)

ஃபீல்டர் இல்லாமல் பேட்டிங் செய்கிறது பாஜக: எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்து கார்த்தி சிதம்பரம்..!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு முக்கிய மசோதாக்களை பாஜக நிறைவேற்றி வரும் நிலையில் பில்டர் இல்லாமல் பாஜக பேட்டிங் செய்து வருகிறது என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றும் மூன்று எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்  எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருப்பதை பாஜக அரசு விரும்பவில்லை என்றும் இது ஒரு கிரிக்கெட் போட்டியில் இல்லாமல் பேட்டிங் செய்வது போன்று உள்ளது என்றும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொலைநோக்கு சட்டங்களை கொண்டு வருகிறார்கள் என்றும் எந்த விவாதத்தையும் கருத்து வேறுபாடுகளையும் அவர்கள் விரும்பவில்லை என்றும் கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Edited by Mahendran