வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (14:29 IST)

அழைத்தது மோடி, ஆனால் ஸ்டாலின் செல்வது எங்கே தெரியுமா?

நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திரமோடி வரும் 30ஆம் தேதியன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மோடி பிரதமராக பதவியேற்கவிருக்கும் அதே நாளில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார். ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அழைப்பை ஏற்று, நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்த்தக்கது