வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (12:58 IST)

வெய்ட் அண்ட் சி... நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஸ்டாலின் பதில்!

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். 
 
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுக 37 மக்களவை தொகுதியிலும், 13 சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் தனபால் அறையில் பதவியேற்றனர்.
 
இதனால் சட்டமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம்  உயர்ந்துள்ளது. எனவே, ஸ்டாலினிடம் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதில் திமுக உறுதியாக உள்ளதா? என கேட்கப்பட்டது. 
 
அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெய்ட் அண்ட் சி... (Wait And See) என பதிலளித்தார். இந்த பதிலுக்கு பின்னர் என்ன அர்த்தம் உள்ளது என்பதை வெய்ட் பண்ணிதான் பார்க்க வேண்டும்.