தொடர்புடைய செய்திகள்
- ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
- கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்: என்ன காரணம்?
- சனாதான தர்மம் தொடங்கியதே தமிழகத்தில்தான்..! – ஆளுனர் ஆர்.என்.ரவி பேச்சு!
- முதல்வர் முக. ஸ்டாலினை பாராட்டிய நடிகர் சத்யராஜ்!
- திமுக ஆட்சியின் அவலங்களை மறைக்க ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது: டிடிவி தினகரன்
ஆளுனர் விவகாரம்: குடியரசு தலைவரை சந்திக்கும் திமுக எம்பிக்கள்!
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என டிஆர் பாலு தலைமையில் நாளை குடியரசுத் தலைவரை திமுக எம்பிக்கள் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்து சில மாதங்களாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் பனிப்போர் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் சட்டமன்றத்தில் அது பெரும் பிரச்சனையாக வெடித்தது.
ஆளுநரை பேச விடாமல் திமுக எம்எல்ஏக்கள் கூச்சல் இட்டதை சபாநாயகர் அப்பாவு கண்டிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், முதல் அமைச்சர் பேசி கொண்டிருக்கும்போது திடீரென ஆளுநர் வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நாளை காலை 11:45 மணிக்கு டிஆர் பாலு தலைமையிலான திமுக மக்களவை குழு குடியரசுத் தலைவரை சந்திக்க இருப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
