வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (10:02 IST)

சனாதான தர்மம் தொடங்கியதே தமிழகத்தில்தான்..! – ஆளுனர் ஆர்.என்.ரவி பேச்சு!

RN Ravi
திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி சனாதானம் தொடங்கியதே தமிழ்நாட்டில் இருந்துதான் என பேசியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா இன்று நடைபெறுகிறது. அதில் காலை முதல் பல்வேறு இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி வருகின்றனர்.

இன்று நடைபெறும் ஆராதனை விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “இந்தியாவின் கலாச்சார அடையாளம் ராமர். காஷ்மிர் முதல் கன்னியாக்குமரி வரை ராமர் ஆன்மீகத்தால் இணைத்துள்ளார். இந்திய நாடு ஆட்சியாளர்களால் உருவாக்கப்படவில்லை. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது.

சனாதான தர்மத்தால் மட்டுமே இது சாத்தியமானது. சனாதான தர்மம் என்பது தெற்கிலிருந்துதான் தொடங்கியது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து தொடங்கியது” என அவர் கூறியுள்ளார்.

Edit By Prasanth.K