ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 11 ஜனவரி 2023 (17:18 IST)

ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா   கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக  காலமானார்.

அவரது மறைவு ஆளுங்கட்சி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து சமீபத்தில். தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் விளக்கம் அளித்திருந்தார்.

அதில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் முறைப்படி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  திருமனன் ஈவேரா மறைவை ஒட்டி ஈரோடு கிழக்குத் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே  6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என தகவல் வெளியாகிறது.