1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK MP strongly condemns Gnanathiravya TTV Dinakaran

திமுக எம்.பி., ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்- டிடிவி. தினகரன்

dinakaran
நெல்லையில் பேராயர் பர்னபாஸுக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்திய திமுக எம்.பி., ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாரில் கல்விக்குழு உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தன்னை நீக்கிய பேராயர் பர்னபாஸுக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்திய திமுக எம்.பி., ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

சிறுபான்மையினர்களின் பாதுகாவலர் எனக் கூறிக் கொள்ளும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு நடந்திருப்பது திமுகவின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரத் தாக்குதல் நடத்திய அவர், மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கே தகுதி இல்லாதவர்.

வெறுமனே வழக்குப்பதிவு மட்டும் செய்யாமல் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகின்றேன்’’ என்று தெரிவித்து, முதல்வர் முக.ஸ்டாலினுக்கு இந்த டுவீட்டை டேக் செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை..!