செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (09:33 IST)

பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியின் ஜாமீன் மனு தள்ளுபடி

uma Karki
பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்க்கி. பாஜக ஆதரவாளரான இவர் சமீபத்தில் தன் டிவிட்டர் பக்கத்தில், பெரியார் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, கோவை மத்திய சிறையில் உமா கார்த்திகேயன் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த  நிலையில் நடிகர் விஜய் பற்றி அவதூறாக பதிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னையில் புகார் அளித்திருந்தனர்.

இதன் அடிப்படையில், கோவை மத்திய சிறையில் இருந்து  உமா கார்க்கி கடந்த 24 ஆம் தேதி  சென்னை அழைத்து சென்றர்.

இதையடுத்து,  புழல் சிறையில் அடைக்கப்பட்ட உமா கார்கியை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர். முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஆபாச, அவதூறு கருத்துகளை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட புகாரில் கைதான பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியின் ஜாமீன் கோரி  கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.