1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (09:05 IST)

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக எம்பிக்கு துரைமுருகன் எச்சரிக்கை..!

duraimurugan
நெல்லை திமுக எம்பி ஞான திரவியம் என்பவருக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நெல்லை திமுக எம்பி ஞான திரவியம் சிஎஸ்ஐ விவகாரத்தில் தலையிடுவதாகவும் நேற்று சிஎஸ்ஐ மத போதகர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இது குறித்து ஞானதிரவியம்  எம்பி மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
 
அந்த நோட்டீஸில் கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார் 
 
மேலும் நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமை அலுவலகத்திற்கு நேரில் அல்லது தபால் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தவறினால் ஞானதிரவியம் எம்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துரைமுருகன் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva