1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk mp kanimozhi going to meet rahul today

காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை!.. பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவரும் திமுக!...

dmk
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை 90 சதவீதம் தனது கூட்டணியை உறுதி செய்துவிட்டது. திமுக வழக்கம் போல் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தை, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என தெரிகிறது. அதேபோல் ராமதாஸையும் இந்த கூட்டணியில் கொண்டு வரும் முயற்சிகளில் நடைபெற்று வருகிறது.. ஆனால் திருமாவளவன் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அது என்னவாகும் எனத்தெரியவில்லை.

ஒருபக்கம் கடந்த பல தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும், மேலும் இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைத்திருக்கிறது..

இதுதொடர்பாக ஏற்கனவே பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் பிரமுகர்கள் கருத்து தெரிவித்தார்கள்.. எனவே இந்த முறை காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணையுமா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. ஒருபக்கம் பிரவின் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜயை போய் சந்தித்ததாலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனநாயகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாலும் திமுகவை விட்டுவிட்டு இந்த முறை காங்கிரஸ் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க போகிறதா என்கிற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில்தான் இன்று டெல்லி சென்றுள்ள திமுக எம்பி கனிமொழி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேசவிருக்கிறாராம். மேலும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என பேசி வரும் காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களுக்கு முடிவு கட்டும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
ஓட்டுக்கு காசு கொடுக்கலாம்!!. டிக்கெட் அதிகமா வித்தா ஊழலா?!., விஜய்க்கு ஆதரவாக மன்சூர் அலிகான்!...