பா.ஜ.கவுக்கு காலே இல்லை, எப்படி ஊன்ற முடியும்: ஸ்டாலின் தாக்கு

VM| Last Modified ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (10:23 IST)
சேலத்தில் சனிக்கிழமை மாலை அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது. 
 
இந்த விழாவில் ஸ்டாலின் பேசுகையில், "அருந்ததியர் இன மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல் பெற்றுத் தந்தவர் கருணாநிதி தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அருந்ததியர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும். 
 
மத்தியில் ஆள்வது மோடி அல்ல. மோடி பிரைவேட் கம்பெனிதான். மோடியின் கவலையெல்லாம் கார்ப்பரேட்டுகளைப் பற்றித்தான். பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என கூறியிருப்பது வாக்குக்காக மறைமுகமாக வழங்கக் கூடிய பணம் தான். தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு காலே இல்லை. எப்படி காலூன்ற முடியும். இங்கு பா.ஜ.க ஒருபோதும் காலூன்றவே முடியாது" இவ்வாறு கூறினார். 


இதில் மேலும் படிக்கவும் :