திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (16:22 IST)

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கூட்டம் – சிதம்பரம் தொகுதியில் திருமா ?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. திமுக தனது தேர்தல் பேச்சுவார்த்தை அணியை உருவாக்கிக் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தங்களுக்கு விருப்பமானத் தொகுதிகள் மற்றும் அவற்றில் வெற்றி வாய்ப்புக்கள் குறித்து திமுக வோடுக் கலந்தாலோசித்து வருகின்றன.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஊடகங்களிடம் பேசினார். அப்போது ‘நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். சிதம்பரம் தொகுதி எனது சொந்த தொகுதி. அங்கு எனக்கான வாக்குகளும் அதிகம். இது குறித்துக் கூட்டணிக் கட்சிகளிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளேன். நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலைத் தயாரித்து அதைக் கூட்டணிக் கட்சிகளிடம் கொடுப்போம். அதன் பின் போட்டியிடும் தொகுதிக் குறித்து முடிவு செய்யப்படும்’ எனத் தெரிவித்தார்