1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 9 பிப்ரவரி 2019 (19:04 IST)

அரசியல் ஆட்டம்: அமமுகவில் அடுத்த விக்கெட் அவுட்; ஸ்கோர் செய்யும் திமுக!

அரசியல் ஆட்டம்: அமமுகவில் அடுத்த விக்கெட் அவுட்; ஸ்கோர் செய்யும் திமுக!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து செந்தில் பாலாஜியை அடுத்து மேலும் ஒரு நபர் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். 
 
அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் மீதான அதிருப்தி மற்றும் மாவட்ட உள்விவகாரம் ஆகியற்றின் காரணமாக, அக்கட்சியில் டிடிவி தினகரனின் வலதுகரமாக விளங்கிய செந்தில் பாலாஜி விலகினார். 
 
அவர் திமுகவில் இணையும் போது அவருடன் 30,000 பேரையும் அழைத்துக்கொண்டு திமுகவில் இணைந்தார். இதனால், டிடிவி தினகரன் கடுப்பானதோடு திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுகவிற்கு பதிலடி கொடுப்போம் என குறிப்பிட்டார். 
அரசியல் ஆட்டம்: அமமுகவில் அடுத்த விக்கெட் அவுட்; ஸ்கோர் செய்யும் திமுக!
ஆனால், தேர்தல் கஜா புயலை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது.  இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருப்பதாக டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார். 
 
இந்நிலையில் அமமுக கட்சியில் இருந்து கரூர் மாவட்ட பொருளாளர் வி.ஜி.எஸ்.குமார் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உடனிருந்தார். இதனால் தினகன் மேலும் அப்செட்டாகியுள்ளார்.